Friday, December 1, 2006

மற்றொரு பீட்டா பரிசோதனை

மற்றொரு பீட்டா பரிசோதனை

Monday, November 27, 2006

பீட்டா பரிசோதனை

பீட்டா பரிசோதனை

Sunday, November 26, 2006

அமிதாப்புக்கு அழைப்பில்லை

இந்திய சர்வதேச திரைப் பட விழா வரும் 23ம் தேதி கோவாவில் துவங்குகிறது.இந்தி திரைப்படத் துறையின் பழம்பெரும் நடிகர் சசி கபூர் விழாவை துவக்கி வைக்கிறார். அன்று இரவு "கலா ஸ்டார் நைட்' விழாவில் சல்மான் கான், பிரபு தேவா, தேசாய், பிரியங்கா சோப்ரா உட்பட தேசிய அளவில் பிரபலமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு கலக்க உள்ளனர். விழாவை இயக்குனர் அபர்னா சென் நிறைவு செய்து வைக்கிறார். துவக்க விழாவிலோ அல்லது நிறைவு விழாவிலோ பங்கேற்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கோவா கலைக் கழக பொது மேலாளர் நிகில் தேசாயிடம் பச்சன் புறக்கணிப்பு குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகளை திரைப்பட விழா இயக்குனரகம் மேற்கொள்கிறது. இந்த அமைப்பு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. கடந்த ஆண்டும் அமிதாப் பச்சன் அழைக்கப்படவில்லை. ஏராளமான நடிகர்கள் இருக்கின்றனர். ஏன் ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டும் குறிப்பிட்டு பிரச்னையாக்குகின்றனர்.இவ்வாறு தேசாய் கூறினார்


காரணம் சோனியாவா?

திருபாய் அம்பானி - மணிரத்தினத்தின் கையில்


திருபாய் அம்பானி கதை மணிரத்தினத்தின் கையில்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவுள்ள "குரு' திரைப்படத்தை பார்க்க தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். தனது தந்தை திருபாய் அம்பானியை மையமாக வைத்து இந்த படம் எடுக் கப்பட்டுள்ளதாக கூறப்படுவதே இதற்கு காரணம்.

பிரபல இயக்குனர் மணிரத்னத் தின் படம் என்றாலே, எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது. தற்போது அவர் எடுத்து வரும் "குரு' என்ற இந்தி படமும் இதற்கு தப்பவில்லை. பாலிவுட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே இந்த படத்திற்கு பலத்த எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. "குரு' படத்தை பார்க்க வேண்டும் என்பதில் சினிமா ரசிகர்களை விட இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வமாக உள்ளார். இவரது தந்தையும், மறைந்த தொழில் அதிபருமான திருபாய் அம்பானியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாக கூறப்படுவதே இதற்கு காரணம். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன், திருபாய் அம்பானி வேடத்திலும், அவரின் மனம் கவர்ந்த(?) ஐஸ் வர்யா ராய், கோகிலாபென் வேடத் திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர மாதவன், ஆர்யா பாப்பர், வித்யா பாலன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்திற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண் டிருக்கிறது. பொதுவாகவே முகேஷ் அம்பானி ஒரு தீவிர சினிமா ரசிகர். பாலிவுட் படங்கள் அனைத்தையும் அவை வெளியாவதற்கு முன்பே "பிரிவியூ ஷோவி'ல் பார்த்து விடும் வழக்கம் உள்ளவர். இப்படிப்பட்டவருக்கு தனது தந்தையை பற்றிய படத்தை பற்றி மட்டும் முன் கூட்டியே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்காதா?. இருந்தாலும் அவர் இதை வெளிப்படையாக கூறவில்லை. இதுகுறித்து முகேஷைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறும் போது,"மணி ரத்னம் தனது படங்கள் வெளி வருவதற்கு முன்பு அதுகுறித்து எந்த விவரத்தையும் தெரிவிக்க விரும்பமாட்டார். அதுகுறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்வார். ஆனால், குரு விஷயத்தில் அவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண் டும். முகேஷுக்கு இந்த படத்தை தனியாக பார்ப்பதற்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். தனது தந்தையை பற்றி தவறாக படம் எடுத்து விடக் கூடாதே என முகேஷ் கவலைப்படுகிறார்,' என்கின்றனர்.

இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர்கள் கூறுகின்றனர். ஹமிஸ் மெக்டொனால்டு என்பவர் "தி பாலிஸ்டர் பிரின்ஸ்: தி ரைஸ் ஆப் திருபாய் அம்பானி' என்ற புத்தகத்தை எழுதினார். அதில் அம்பானியை பற்றி பல தகவல்கள் தவறாக கூறப்பட்டுள்ளன. இதனால் அந்த புத்தகம் இன்னும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. அவ்வாறு வெளியானால், அம்பானி குடும்பத் தினர் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவார் களோ என்ற பயம்தான் இதற்கு காரணம். ஆனால், குரு விஷயத்தில் முகேஷ் பெரிதாக கவலைப்பட தேவையில்லை. அம்பானி குடும் பத்தினரை பற்றி நன்கு அறிந்த, அவர்களுக்கு மிகவும் நெருக்கமான அமிதாப்பின் மகன் அபிஷேக், குருவில் நடிப்பதே இதற்கு காரணம். திருபாய் அம்பானியின் புகழுக்கு களங் கம் ஏற்படும் வகையிலான காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தால், அதற்கு பச்சன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருப் பார்கள் என்றும் நம்புகின்றனர்.

--
மேலே மணிரத்தினத்தின் கையில் அப்பா கதை என்ன பாடு படப்போகிறதோ என்ற கவலையில் மகன்

அபிஷேக் -ஐஸ்?

ஐஸ் அபிஷேக் திருமணம் காசி கோவிலில் நடக்கிறது என்று அரசல் புரசலாக எல்லா பத்திரிக்கைகளும் எழுதிகொண்டிருக்கின்றன.

http://www.zeenews.com/articles.asp?aid=338246&sid=ENT&ssid=1

மணிரத்னம் இயக்கும் குரு படத்திலும், தாய் அக்ஸர் ப்ரேம் கே படத்திலும், உம்ரா ஜான் படத்திலும் நடித்துவிட்டு ஓய்வெடுக்கிறார் ஐஸ்.

இருவர் படத்தில் சுள்ளான் மாதிரி வந்த ஐஸ் தற்போது நன்றாக வளமையாக இருக்கிறார்

வயதாகிவிட்டதல்லவா?


ரேகாவின் உம்ரா ஜான் படத்தைத்தான் போட்டிருக்கிறேன்.

என்ன இருந்தாலும் தில் சீஸ் ஹை?

கவுன் பனேகா கரோடுபதி?






அமிதாப்பின் இடத்தை ஷா ருக் கான் பிடித்திருக்கிறார்.

அமிதாப்புக்கு பிறகு அடுத்த இந்தி சூப்பர் ஸ்டார் ஷா ருக் கான் தான் என்று பரவலாக பேசுவதை டெலிவிஷனும் நிரூபித்துள்ளது

கடந்த டிசம்பரில் வயிற்று பிரச்னைக்காக ஆஸ்பத்திரி சென்ற அமிதாப், சினிமாவை தொடர்ந்தார் ...ஆனால் கவுன் பனேகா கரோடுபதியை தொடரவில்லை

ஸ்டார் இந்தியா சேர்மன் சாமிர் நாய்ர் ஷா ருக் கானுக்கு புகழ்மாலை சூட்டுகிறார்

ஷா ருக் கான் அமிதாப் இடத்தை பிடித்தாலும் தக்கவைப்பாரா என்று பார்ப்போம்

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/11/26/AR2006112600391.html

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல்
காதல் கோட்டை
எஸ் பி பாலசுப்பிரமணியன்

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?


தீண்டு வரும் காற்றினையே
நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமா
என் இதழ் இனை அன்றி பிறர் தொடலாமா
இரவினில்
கனவுகள்
தினம் தொல்லையே
உறக்கம்
எனக்கில்லை
கனவில்லையே


கோவிலிலே நான் தொழுதேன்
கோல மயில் உன்னை சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன்
காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா
வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா
நிழல் படம்
அனுப்பிடு
என்னுயிரே
நிஜன் இன்றி
வேறில்லை
என்னிடமே