Sunday, November 26, 2006

திருபாய் அம்பானி - மணிரத்தினத்தின் கையில்


திருபாய் அம்பானி கதை மணிரத்தினத்தின் கையில்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவுள்ள "குரு' திரைப்படத்தை பார்க்க தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். தனது தந்தை திருபாய் அம்பானியை மையமாக வைத்து இந்த படம் எடுக் கப்பட்டுள்ளதாக கூறப்படுவதே இதற்கு காரணம்.

பிரபல இயக்குனர் மணிரத்னத் தின் படம் என்றாலே, எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது. தற்போது அவர் எடுத்து வரும் "குரு' என்ற இந்தி படமும் இதற்கு தப்பவில்லை. பாலிவுட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே இந்த படத்திற்கு பலத்த எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. "குரு' படத்தை பார்க்க வேண்டும் என்பதில் சினிமா ரசிகர்களை விட இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வமாக உள்ளார். இவரது தந்தையும், மறைந்த தொழில் அதிபருமான திருபாய் அம்பானியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாக கூறப்படுவதே இதற்கு காரணம். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன், திருபாய் அம்பானி வேடத்திலும், அவரின் மனம் கவர்ந்த(?) ஐஸ் வர்யா ராய், கோகிலாபென் வேடத் திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர மாதவன், ஆர்யா பாப்பர், வித்யா பாலன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்திற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண் டிருக்கிறது. பொதுவாகவே முகேஷ் அம்பானி ஒரு தீவிர சினிமா ரசிகர். பாலிவுட் படங்கள் அனைத்தையும் அவை வெளியாவதற்கு முன்பே "பிரிவியூ ஷோவி'ல் பார்த்து விடும் வழக்கம் உள்ளவர். இப்படிப்பட்டவருக்கு தனது தந்தையை பற்றிய படத்தை பற்றி மட்டும் முன் கூட்டியே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்காதா?. இருந்தாலும் அவர் இதை வெளிப்படையாக கூறவில்லை. இதுகுறித்து முகேஷைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறும் போது,"மணி ரத்னம் தனது படங்கள் வெளி வருவதற்கு முன்பு அதுகுறித்து எந்த விவரத்தையும் தெரிவிக்க விரும்பமாட்டார். அதுகுறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்வார். ஆனால், குரு விஷயத்தில் அவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண் டும். முகேஷுக்கு இந்த படத்தை தனியாக பார்ப்பதற்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். தனது தந்தையை பற்றி தவறாக படம் எடுத்து விடக் கூடாதே என முகேஷ் கவலைப்படுகிறார்,' என்கின்றனர்.

இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர்கள் கூறுகின்றனர். ஹமிஸ் மெக்டொனால்டு என்பவர் "தி பாலிஸ்டர் பிரின்ஸ்: தி ரைஸ் ஆப் திருபாய் அம்பானி' என்ற புத்தகத்தை எழுதினார். அதில் அம்பானியை பற்றி பல தகவல்கள் தவறாக கூறப்பட்டுள்ளன. இதனால் அந்த புத்தகம் இன்னும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. அவ்வாறு வெளியானால், அம்பானி குடும்பத் தினர் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவார் களோ என்ற பயம்தான் இதற்கு காரணம். ஆனால், குரு விஷயத்தில் முகேஷ் பெரிதாக கவலைப்பட தேவையில்லை. அம்பானி குடும் பத்தினரை பற்றி நன்கு அறிந்த, அவர்களுக்கு மிகவும் நெருக்கமான அமிதாப்பின் மகன் அபிஷேக், குருவில் நடிப்பதே இதற்கு காரணம். திருபாய் அம்பானியின் புகழுக்கு களங் கம் ஏற்படும் வகையிலான காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தால், அதற்கு பச்சன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருப் பார்கள் என்றும் நம்புகின்றனர்.

--
மேலே மணிரத்தினத்தின் கையில் அப்பா கதை என்ன பாடு படப்போகிறதோ என்ற கவலையில் மகன்

No comments: