Sunday, November 26, 2006

அமிதாப்புக்கு அழைப்பில்லை

இந்திய சர்வதேச திரைப் பட விழா வரும் 23ம் தேதி கோவாவில் துவங்குகிறது.இந்தி திரைப்படத் துறையின் பழம்பெரும் நடிகர் சசி கபூர் விழாவை துவக்கி வைக்கிறார். அன்று இரவு "கலா ஸ்டார் நைட்' விழாவில் சல்மான் கான், பிரபு தேவா, தேசாய், பிரியங்கா சோப்ரா உட்பட தேசிய அளவில் பிரபலமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு கலக்க உள்ளனர். விழாவை இயக்குனர் அபர்னா சென் நிறைவு செய்து வைக்கிறார். துவக்க விழாவிலோ அல்லது நிறைவு விழாவிலோ பங்கேற்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கோவா கலைக் கழக பொது மேலாளர் நிகில் தேசாயிடம் பச்சன் புறக்கணிப்பு குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகளை திரைப்பட விழா இயக்குனரகம் மேற்கொள்கிறது. இந்த அமைப்பு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. கடந்த ஆண்டும் அமிதாப் பச்சன் அழைக்கப்படவில்லை. ஏராளமான நடிகர்கள் இருக்கின்றனர். ஏன் ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டும் குறிப்பிட்டு பிரச்னையாக்குகின்றனர்.இவ்வாறு தேசாய் கூறினார்


காரணம் சோனியாவா?

No comments: